தென்றல் தாரகை - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/kovcm_23762.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தென்றல் தாரகை |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 1407 |
புள்ளி | : 246 |
புரியாதோருக்கு அகந்தைமிகு திமிராய் - புயலாய் நான்
புரிந்துகொள்ள முற்படுவோருக்கு விசித்திரமானவளாய் - விந்தையான புதிராய் நான்
புரிந்துகொண்டோருக்கு வித்தியாசமான - ரசனைமிகு புதுக்கவிதையாய் நான்
ஒவ்வொருவர் பார்வைக்கும் ஒவ்வொரு விதமாய் நான்
நான் எனும் நான்
நான் மட்டுமே அறிந்த நான்
காதல் அருந்தக் கேட்டேன் கானல் நீரை கையில் கொடுத்து பருகச் சொல்கிறாய்..
அழகிய காதல் தீவில் இருந்து கொண்டு என்னை வேள்வி தீயில் எரித்து விடுகிறாய்!!...
புன்னகை செய்யாமல் புருவம் தூக்கி கர்வம் கொள்கிறாய்....
உன் விழிகள் கொண்டு என் வழிகள் மாற்றிவிட்டாய் உன் வாய்மொழி தான் சொல்வாயோ!!....
மௌனம் வேண்டாம் பெண்ணே விழி அசைத்து விடு போதும் கண்ணே!!..
சுற்றம் சூழ மாலை மாற்றி
மணமுடிக்காவிடினும்,,,
அவனே தன் மணாளனென வாழ்ந்த
பெண்ணொருத்தியின் மார்பில்
தவழவிருந்த பொட்டுத் தாலியொன்று
அவள் தன்னவனாக
நினைத்தவனின் கரங்களினால்
வேறொருவருக்கு அணிவிக்கப்பட்டால்.???
அவன் கட்டிய தாலியையும்
வைத்த குங்குமத்தையும்
அணிவித்த மெட்டியையும்
சுமக்கும் வரம் பெறாவிடினும்
இலேசில் எவருக்கும் கிட்டிடாத
அவனது காதலையும் வெறுப்பையும்
ஒருசேரப் பெற்றவளிவள்..!!
இதுபோதுமே,
அவளின் இனிவரும் நாட்களுக்கு..!!!!
சுற்றம் சூழ மாலை மாற்றி
மணமுடிக்காவிடினும்,,,
அவனே தன் மணாளனென வாழ்ந்த
பெண்ணொருத்தியின் மார்பில்
தவழவிருந்த பொட்டுத் தாலியொன்று
அவள் தன்னவனாக
நினைத்தவனின் கரங்களினால்
வேறொருவருக்கு அணிவிக்கப்பட்டால்.???
அவன் கட்டிய தாலியையும்
வைத்த குங்குமத்தையும்
அணிவித்த மெட்டியையும்
சுமக்கும் வரம் பெறாவிடினும்
இலேசில் எவருக்கும் கிட்டிடாத
அவனது காதலையும் வெறுப்பையும்
ஒருசேரப் பெற்றவளிவள்..!!
இதுபோதுமே,
அவளின் இனிவரும் நாட்களுக்கு..!!!!
ஆயுள் முழுமைக்குமானவற்றை பேசித் தீர்த்தாயிற்று
ஆங்காங்கே சில கோபப் பார்வைகள்
அதனிடையே மென்மையாய் விரல்களின் இறுக்கம்
அவ்வப்போது ஓராயிரம் புன்னகைகள்
சிறு சிறு சீண்டல்களோடு
இனி மௌனமாய் ஒரு யுகம் போதும்..!!!!
இறப்பு ஏதும் நிகழ்ந்ததாய் தெரியவில்லை
மரணஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது
சன்னல் சாளரம் மூடப்பட்டு விட்டது
இனி,
அழுகுரல் எவர் செவியையும் எட்டாது
ஓலம் கேட்டு எவரும் ஓடி வரமாட்டர்
இடையூறு ஏதுமின்றி ஓலம் தொடரும். . . . .
கேட்டது
கேட்டதும் கிடைக்காவிடினும்
கேட்டது
கேட்டதைவிடவும்
சிறப்பாய் கிடைக்கும் அவரிடம்..!!!
#My dr faathu
இல்லத்திற்கு இளையவளாய்
பரணியில் பிறந்து
தரணி ஆளும் தங்க தாரகையாய்
எந்தையும் தாயும்
அன்போடு அணைக்கும்
செல்ல மகளாய்
கற்றுக்கொடுத்த குருவுக்கு
நல்ல மாணவியாய்
கற்றுக்கொடுக்கும் மாணவர்களுக்கு
நல்ல குருவாய்
உற்றாரும் உறவினரும்
போற்றும் நன் மங்கையாய்
அலுவலகத்திலும் புகழோடு
பெருமை சேர்க்கும்
நல் நங்கையாய்
என்னை நேசிக்கும் ஜீவன்களை
நேசிக்கும் சிநேகிதியாய்
இயற்கையின் காதலியாய்
இன்றுவரை
வாழ்ந்துகொண்டிருக்கும் நான்
கடந்த பாதையில் நடந்த
சுகங்களை மனதில் ஏற்றி
சோகங்களை வெளியில் தூற்றி
என்னை உண்மையாய்
நேசிக்கும் உறவுகள் அனைவரின்
அன்பு மழையில் நனைந்
அடி
பெண்ணே...
உன் வரவால்...
என் வாழ்க்கை...
புயலால்
ஏற்பட்ட
பருவ மழை
மாற்றமாய் மாறிவிட்டது...!
ஆனால் நீயோ
சற்றும் தாழ்வு
மனப்பான்மை
இன்றி வந்த
வேகத்தில்
என்னில் புகுந்து
என் இதயத்தை கிழித்து
கடந்து சென்றுவிட்டாய்...!
இடி விழுந்த என் காதல்...!
தேங்கிய மழை
நீராய் என் கண்கள்...!
நிவாரணமான நீ எங்கே....???
இவன்
பிரகாஷ்
*********திரும்பி !
உன்னை என்னவென்று கேட்டேன் ..
அன்று தெரியவில்லை நீதான் என்
என்னவன் என்று !
நீதான் என் என்னவன் என்று தெரிந்த பின்
உன்னை என்னவென்று கேட்கத் தோனவில்லை
இன்று உன்னவள் என்று ... *******
எழிலானவன் இதமானவன்
அவன் கால் பதிக்கும் இடங்களில்
சருகான இலைகளும் மலராகி மணம் வீசும் .
மூச்சிக் காற்றின் முன்னால் புயலும் தென்றலாய் வருடிவிடும்.
விழிப்பார்வையின் வெப்பத்தை நோக்கிட முடியாமல் ஆதவனும் சற்றே விலகி செல்வான் .
புருவம் உயர்த்துகையில் பூகம்பமோ என்று புரியாது விழிப்பாள் பூமாதேவி .
இதழ் அசைவை இசையென நினைத்து வண்ண மயிலின் நாட்டியத்திற்கு
வாயசைக்கும் குயில்கள் .
அவன் வார்த்தைகளின் முன்னால்
தான் வர்ணித்த அத்தனை கவிதைகளும் தோற்றுவிட்டதை எண்ணி தூக்கிட்டுக்கொண்டு இருப்பான் கம்பன் .
காவியங்கள் எல்லாம் வெறுமையாகி
கைகட்டி வாய்ப்பொத்தி காத்திருக்கும் அவன் புகழை