எனக்கென என்னவனில்லாதுபோனால்

சுற்றம் சூழ மாலை மாற்றி
மணமுடிக்காவிடினும்,,,
அவனே தன் மணாளனென வாழ்ந்த
பெண்ணொருத்தியின் மார்பில்
தவழவிருந்த பொட்டுத் தாலியொன்று
அவள் தன்னவனாக
நினைத்தவனின் கரங்களினால்
வேறொருவருக்கு அணிவிக்கப்பட்டால்.???

அவன் கட்டிய தாலியையும்
வைத்த குங்குமத்தையும்
அணிவித்த மெட்டியையும்
சுமக்கும் வரம் பெறாவிடினும்
இலேசில் எவருக்கும் கிட்டிடாத
அவனது காதலையும் வெறுப்பையும்
ஒருசேரப் பெற்றவளிவள்..!!

இதுபோதுமே,
அவளின் இனிவரும் நாட்களுக்கு..!!!!

எழுதியவர் : தென்றல் தாரகை (9-Oct-18, 12:11 pm)
பார்வை : 162

மேலே