அழகு தேவதை

கள்ளமில்லாத கிராமத்துக் கன்னிப்பெண்
எள்ளளவும் விரசமின்றி தன்னுடலின்
கொள்ளளவை மறைத்து நின்றாள்
பள்ளவயல் மேற்கு மலை நின்று வந்த
கள்ளக் காற்று அவளுடலில் ஆசைப்பட்டு
உள்ளே நுழைந்து இடை வெளிகள் விலக்க
அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாய்
அழகி கண் முன்னே நின்று மயக்கினாள்

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (9-Oct-18, 11:50 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : alagu thevathai
பார்வை : 472

மேலே