என்னவளதிகாரம்--நிவாரணமாய் நீ

அடி
பெண்ணே...

உன் வரவால்...

என் வாழ்க்கை...
புயலால்
ஏற்பட்ட
பருவ மழை
மாற்றமாய் மாறிவிட்டது...!

ஆனால் நீயோ
சற்றும் தாழ்வு
மனப்பான்மை
இன்றி வந்த
வேகத்தில்
என்னில் புகுந்து
என் இதயத்தை கிழித்து
கடந்து சென்றுவிட்டாய்...!

இடி விழுந்த என் காதல்...!

தேங்கிய மழை
நீராய் என் கண்கள்...!

நிவாரணமான நீ எங்கே....???

இவன்
பிரகாஷ்

எழுதியவர் : பிரகாஷ் (13-Dec-15, 10:31 am)
பார்வை : 370

மேலே