என்னவளதிகாரம்--உன் பரிசு மரணமா

பெண்ணே
நான்...
என் வாழ்வில்...!
வெற்றிகளை விட
தோல்விகளை சந்தித்தவன்...!
தூக்கத்தை விட
தனிமையை நேசித்தவன்...!
காதலை விட
பிரிவை சுமந்தவன்...!
சிரிப்பை விட
அழுகையை ரசித்தவன்...!
நினைவை விட
கனவை விரும்பியவன்...!
நிஜத்தை விட
நிழலை நம்பியவன்...!
உன்னை
சந்தித்த நாள் முதல்...
இவையெல்லாம்
உன்னால்
மாறும் என எண்ணி...
என்னை விட
உனையே
நேசித்தேன் சுவாசித்தேன்...!
ஆனால்
நீயோ
பெண்ணே...
என்னை ஏமாற்றி
வாழ்வதைவிட
மரணம்
சிறந்தது
என புரிய வைத்துவிட்டாய்..!!
இவன்...
பிரகாஷ்....