மெளனம் அழகிய தவிப்பு

காதல் அருந்தக் கேட்டேன் கானல் நீரை கையில் கொடுத்து பருகச் சொல்கிறாய்..

அழகிய காதல் தீவில் இருந்து கொண்டு என்னை வேள்வி தீயில் எரித்து விடுகிறாய்!!...

புன்னகை செய்யாமல் புருவம் தூக்கி கர்வம் கொள்கிறாய்....

உன் விழிகள் கொண்டு என் வழிகள் மாற்றிவிட்டாய் உன் வாய்மொழி தான் சொல்வாயோ!!....

மௌனம் வேண்டாம் பெண்ணே விழி அசைத்து விடு போதும் கண்ணே!!..

எழுதியவர் : தீனா (10-Oct-18, 5:53 pm)
சேர்த்தது : தீனா
பார்வை : 688

மேலே