இதயம்

எப்படி அன்பின் பிறப்பிடம் ஆனாய் ?
காதலின் குறியீடனாய் ?
பிரிவின் பெறுவலியனாய் ?
நட்பின் உறைவிடமானாய் ?
மனதின் இருப்பிடமானாய் ?

காரண அறிவாள் கண்டுணந்தோர்
சொல்வர் ,
நீ வெறும் தானியங்கி
ரத்த விசை தசை குழாய் என்றும் ,...
உணர்வுகள் பிறப்பிடமே
மண்டைஓட்டுக்கள்
மறைந்து மிதக்கும்
அந்த மலர் ஒத்த மூளையில் இருந்துதான் என்றும் ....

காதலோ காமமோ ,
அன்போ ஆனந்தமோ ,
விருப்போ ,வெறுப்போ ..
உண் ஒவ்வொரு வித அதிர்வுகளில்தான்
உணர்கிறேன் உணர்வுகளின் இருப்பை .

எழுதியவர் : (10-Oct-18, 4:30 pm)
Tanglish : ithayam
பார்வை : 57

மேலே