இதுவரை படைக்கப் படாத என்னவன்
எழிலானவன் இதமானவன்
அவன் கால் பதிக்கும் இடங்களில்
சருகான இலைகளும் மலராகி மணம் வீசும் .
மூச்சிக் காற்றின் முன்னால் புயலும் தென்றலாய் வருடிவிடும்.
விழிப்பார்வையின் வெப்பத்தை நோக்கிட முடியாமல் ஆதவனும் சற்றே விலகி செல்வான் .
புருவம் உயர்த்துகையில் பூகம்பமோ என்று புரியாது விழிப்பாள் பூமாதேவி .
இதழ் அசைவை இசையென நினைத்து வண்ண மயிலின் நாட்டியத்திற்கு
வாயசைக்கும் குயில்கள் .
அவன் வார்த்தைகளின் முன்னால்
தான் வர்ணித்த அத்தனை கவிதைகளும் தோற்றுவிட்டதை எண்ணி தூக்கிட்டுக்கொண்டு இருப்பான் கம்பன் .
காவியங்கள் எல்லாம் வெறுமையாகி
கைகட்டி வாய்ப்பொத்தி காத்திருக்கும் அவன் புகழை மட்டுமே சுமக்க .
யார் இவன்
இவனே தான் எனக்கானவன் .
கற்பனை கவிகளுக்கு உயிர்கொடுக்கும் காதலன் .
இது வரை பிரம்மனால்
எனக்காக பூமியில் படைக்கப் படாத
எழிலானவன் இதமானவன் ..!!!