மட்டை விளையாட்டு

மட்டை விளையாட்டு*


வெட்டியாய்ப் பொழுதைப் போக்கச் சிறந்த விளையாட்டு
மட்டை விளையாட்டுத் தவிர வேறொன்றும் இல்லை
மற்ற விளையாட்டுகளில் அரைமணி நேரம்
விளையாடினாலே போதும் ஓய்ந்து களைத்துப்போக;
மட்டை விளையாட்டில் மட்டும் அப்படியில்லை

நாள்முழுதும் வெயிலில் விளையாடினாலும்
ஒருசிலர்க்கே அவ்வப்போது ஓடுகின்ற வாய்ப்பு
பலவீரர் வெயிலில் வெகுநேரம் காய்ந்து
அங்குமிங்கும் நின்றிருந்து வியர்வையைத் துடைப்பார்
அவ்வப்போது அரட்டையில் பொழுதையும் கழிப்பார்

விளையாட்டுகளின் வசூல்ராஜா மட்டை விளையாட்டே
அதனால்தான் அதற்கு நாம் ஒட்டுகின்ற மவுசும்
பொன்னான நேரத்தை இரசித்து வீணடிக்க
எண்ணற்ற இரசிகர்கள் இருப்பதனால் தானே
மட்டை விளையாட்டினர்க்கும் கொழுத்த வருமானம்.

ஓய்வின்றி விளையாடும் விளையாட்டுக் கெல்லாம்
சிற்சில நாடுகளில் மரியாதை இல்லை
(இந்தியாவும் அந்நாடுகளில் முதன்மையாக இருக்கும்)
பெர்னாட் ஷா சொன்னதை எவரிங்கு ஏற்பார்
பொங்கி யெழுவார் அதை நானிங்கு சொன்னால்
அதனாலே என்கருத்தை இத்தோடு முடிப்பேன்..


*Cricket
மட்டை விளையாட்டை (கிரிக்கெட்) ஒரு சில நாடுகளில் மட்டுந்தான் விளாயாடுகிறார்கள். 1.ஆஸ்திரேலியா,
2. இங்கிலாந்து, 3. பங்களாதேஷ், 4. பாகிஸ்தான், 5. ஜிம்பாப்வே, 6. தென்னாப்பிரிக்கா, 7. நியூஜிலாந்து, 8. இந்தியா, 9. மேற்கு இந்தியத் தீவுகள், 10. 11. இலங்கை.

உலகில் உள்ள 249 நாடுகளில் 11 நாடுகளில் மட்டுமே மட்டை விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. மட்டை விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும் நாடுகள்:
1. ஆஸ்திரேலியா
Cricket Australia
15 July 1909 2 1 4
2. பங்களாதேஷ்
Bangladesh Cricket Board
26 June 2000 9 9 10
3. இங்கிலாந்து
England and Wales Cricket Board
15 July 1909 4 5 8
4. இந்தியா
Board of Control for Cricket in India
31 May 1926 7 2 2
5. நியூ சிலாந்து
New Zealand Cricket
31 May 1926 5 6 7
6. பாகிஸ்தான்
Pakistan Cricket Board
28 July 1952 4 7 3
7. தென் ஆப்ரிக்கா
Cricket South Africa
15 July 1909 1 3 5
8. இலங்கை
Sri Lanka Cricket
21 July 1981 6 4 1
9. மேற்கிந்தியத் தீவுகள்
10. West Indies Cricket Board
31 May 1926 8 8 6
11. ஜிம்பாப்வே
Zimbabwe Cricket
6 July 1992 10 10 13

எழுதியவர் : (25-Feb-15, 4:14 pm)
பார்வை : 99

மேலே