திருந்தாத ஜென்மங்கள்

திட்டம் வகுத்தது அரசு
பெண்சிசுக் கொலையைத்தடுக்க

திட்டத்தை நிறைவேற்றியது
சட்டசபையில்

இனி பிறக்கும் பெண் குழந்தைக்கு
வருடம் பத்தாயிரம் வளர்ப்பு நிதியாம்

பதினேலாவது வயதில்
கல்விக்காக இரண்டு லட்சமாம்

இருபத்தியோராவது வயதில்
திருமணத்திற்காக மூன்று லட்சமாம்

ஆனால்,
நினைத்தது ஒன்று
நடந்தது ஒன்று

திட்டம் தீட்டியும்
நடந்தது சிசுக்கொலை

ஆச்சர்யமாக உள்ளதா...
நடந்தது ஆண் சிசுக்கொலை...


[இது கற்பனையே... உண்மையல்ல...]

எழுதியவர் : சந்திர கார்த்திகா (8-Aug-14, 4:24 pm)
பார்வை : 466

மேலே