பிறந்த பொருள்

பிறந்த பொருள்

நீ பிறந்த பொருள்
அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.

உன் வழித்தடத்தில் உனைத்தொடர
ஓருயிர்உண்டு என்பதை மறந்துபோகிறாய்.

உன் நிழலில் இளைப்பாற
ஓர் ஜீவனுண்டு என்பதை மறந்துபோகிறாய்.

வேகமான உன் விளையாட்டில்
இக்காய் அவசியமானால்
மட்டுமே நகர்த்தப்படுகிறது.

இயந்திரமான உன் வாழ்வில்
இக்கருவி அவசரத்தில்
தான் இசைக்கப்படுகிறது.

வாழ்வின் மறுபக்கத்தை
உன்னோடு களிக்க ஏங்கும்
உன் உயிரின் மனமார்ந்த
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எழுதியவர் : அபர்ணாசெங்கு (8-Aug-14, 6:18 pm)
சேர்த்தது : அபர்ணா
Tanglish : pirantha porul
பார்வை : 80

சிறந்த கவிதைகள்

மேலே