சக்தி~அவள்்்
சமையல் அறையிலே ஒடுக்கப்பட்டால் என்ன?
அகிலத்தையே அடுப்படிக்குக் கொண்டு வா!
சிறகொடித்து கூண்டில் அடைத்தால் என்ன?
குரலெழுப்பி சிறையிருந்தே புரட்சி செய்!
விலங்குகளால் கைகள் பிணைக்கப்பட்டால் என்ன?
சரித்திரத்தையே பூட்டிய கரங்களால் மாற்றி எழுது!
வன்முறையால் முதுகெலும்பை ஒடித்தால் என்ன?
வஜ்ராயுதமாய் கொண்டு நிமிர்வுடன் தாக்கு!
பெண்ணே!!!உன்னை அறிந்து கொள்.உன் பலத்தைத் தெரிந்து
கொள்.
சக்தியின்றி சிவனே இல்லையெனும் போதுநீயின்றி இவ்வுலகம் இயங்குவது ஏது!!