சரிவுகள் வீழ்ச்சியல்ல
மேலிருந்து கீழே
விழுந்ததற்காக
வருத்தம் வேண்டாம் -
உன்னாலும் ஏற்றம்
காண முடியும்
அடி சறுக்கியதற்காக
அழுது நின்றால்
உன் கண்ணீரில்
நீந்திச் சென்றுவிடும் ,
வெற்றி வேறொருவரிடம்
அனைத்தும் உன்னிடமே
இருந்தும் எதற்காகக்
கவலைப்படுகிறாய்
உன்னை மற்றவர்
அறியாததற்காகவா
பிறர் பாராட்டால்
அறிவு வளர்வதில்லை
புத்திசாலிகள்
புதையுண்டு கிடைப்பதுமில்லை
முளைவிட்ட விதை
விருட்சமாவதும்
முட்செடியாவதும்
உன் கைகளில் மட்டுமே
உனக்கான தருணங்களை நீ
தேடிச் செல்வதைவிட
இன்றைய நொடிகளை
உன்னுடையதாக்கு
தேடாமல் தேடி வரும்
உன் நேரம்,
புதுப்புது வெற்றிகளின்
துணைகொண்டு!!