பெண்மைக்கு நீதி கிடைக்குமா - நாகூர் லெத்தீப்

உணர்ச்சியற்ற
மனித மிருகம்
வேட்டையாடுகிறது
கெடுக்கிறது
பெண்மையை........!

பாலினம்
பெண்மையானதால்
அ(ப்)பாவிகளுக்கு
பாலியல்
வன்முறையோ.........!

நீதிக்கு முன்னே
பெண்மை
கதறுகிறது
நீதி கேட்கிறது...........!

ஆதாரம்
இருந்தும்
அர்த்தமற்ற தீர்ப்புகள்
தியாகிகளாக கைதிகள்
சித்தரிப்பு.........!

வன்முறைகள்
வெறிச்செயல்கள்
பெண்மையிடம்
காட்டுகிறது
ஆண்மையற்ற பதறுகள்.........!

மானத்தை
இழந்து
வெளியில் சொல்ல
தயங்கி நிற்கும்
பெண்மைக்கு யார்
நீதி வழங்குவது..........!

துயில் உறிக்கும்
துரோகிகளை
தோளை உறிக்கும்
காவல் துறை வருமா.........!

பாரத தாயே
நீயும் பெண்தானே
சுதந்திரம் பெற்றது
உண்மைதானே.........!

விரைந்து
வந்திவிடு நீதியை
கொடுத்துவிடு
ஆதரவற்ற
பெண்களுக்கு..........!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (16-Jun-14, 4:29 pm)
பார்வை : 116

மேலே