அரிப்பைச் சொறிதல்
ஒருநாள்
எனக்கு பயங்கரமாக
அரித்தது !
சொறிந்து கொண்டிருந்தேன்
மண்டையை !
ஒருவன் வந்தான் !
மண்டையைச் சொறிவது
குடும்பத்துக்காகாது
என்றான் !
இன்னொருவன் வந்தான் !
இதுவொரு வியாதி .....
மருத்துவரைப் பாரென்றான் !
அடுத்தவன் வந்தான் !
இப்படிப்
பொதுவிடத்தில் நின்று
சொறிகிறாயே
இது நாகரிகமா ?
என்றான்
நான்
சொறிவதை
நிறுத்திவிட்டேன் !
ஆனாலும்
அரித்துக்கொண்டிருந்தது !
பின்குறிப்பு :
பிறிதொரு நாளில்
மண்டையைச்
சொறிந்து கொண்டிருந்த
மேற்கண்ட
மூன்று பேரை
தனித்தனியே
கண்டேன் நான் !