சாயல்

தவறான முடிவை சரி செய்தாச்சு
தோற்றல் பரவாயில்லை தொடருதல் கூடாது,
போராடும் வாழ்வு போதும் என்று பிரிஞ்சாச்சு
அலுவலகம் நட்பு எல்லாம் மாற்றல் செய்தாச்சு
அம்மா வீடு திரும்பி அவமானம் மென்று முழுங்கியாச்சு
பாத்திரம் பண்டம் எல்லாம் பகிர்ந்தாச்சு
புகைப்படம் பத்திரிக்கை எல்லாம் கிழித்தாச்சு
நகை நட்டு உருக்கியாச்சு
உறவென்ன உலகமென்ன உண்மை புரிஞ்சாச்சு
காலமென்னும் தைலத்தால் காயங்கள் ஆறியாச்சு
நினைவு சுவடு முழுதாய் புதைச்சாச்சு
பட்டதெல்லாம் பழசாச்சு
அச்சடிச்சு வெச்சா போல அருமை மகள்
முகம் மட்டும் அவன் சாயலில் சிரிக்க
விதி என்று ஒன்று இருப்பது தெரிஞ்சாச்சு

எழுதியவர் : Madhubala (16-Jun-14, 12:48 pm)
Tanglish : saayal
பார்வை : 112

மேலே