Madhubala SR - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Madhubala SR |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 27-Apr-1975 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 06-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 115 |
புள்ளி | : 34 |
பிடித்தவை: மழையும் மரமும் கவிதையும் கடலும்.பிழைப்பிற்கு அரசு வேலை.ஆன்மீக நாட்டம் அதிகரித்துள்ளது.வெளியே தேடலில் களைத்து உள்ளே தேடல் துவக்கியுள்ளேன்.
தவறான முடிவை சரி செய்தாச்சு
தோற்றல் பரவாயில்லை தொடருதல் கூடாது,
போராடும் வாழ்வு போதும் என்று பிரிஞ்சாச்சு
அலுவலகம் நட்பு எல்லாம் மாற்றல் செய்தாச்சு
அம்மா வீடு திரும்பி அவமானம் மென்று முழுங்கியாச்சு
பாத்திரம் பண்டம் எல்லாம் பகிர்ந்தாச்சு
புகைப்படம் பத்திரிக்கை எல்லாம் கிழித்தாச்சு
நகை நட்டு உருக்கியாச்சு
உறவென்ன உலகமென்ன உண்மை புரிஞ்சாச்சு
காலமென்னும் தைலத்தால் காயங்கள் ஆறியாச்சு
நினைவு சுவடு முழுதாய் புதைச்சாச்சு
பட்டதெல்லாம் பழசாச்சு
அச்சடிச்சு வெச்சா போல அருமை மகள்
முகம் மட்டும் அவன் சாயலில் சிரிக்க
விதி என்று ஒன்று இருப்பது தெரிஞ்சாச்சு
வழியில் உள்ள கல்
உன் கால் தடுக்க
வலித்தது எனக்கு.
உன் வழியெங்கும்
மென்மையான கல் ஆக
நான் மாற
வரம் கேட்கும் அகலிகை நான்
வழியில் உள்ள கல்
உன் கால் தடுக்க
வலித்தது எனக்கு.
உன் வழியெங்கும்
மென்மையான கல் ஆக
நான் மாற
வரம் கேட்கும் அகலிகை நான்
உன் கைக்குட்டை
கசங்கினால்
கசங்குகிறது என் மனம்
உன் கண்ணில் தூசி விழுந்தால்
என் இமைகள் வெட்கி
தலை குனிகின்றன
கடமை தவறிய காரணத்தால்
நான் தீவிரவாதி
என் வேண்டுகோள்
அனைவரும் தீவிரவாதி ஆகுங்கள்
தீவிரமாய் காதல் செய்யுங்கள்
உலகம் ரம்மியமாகும்
தீவிரமாய் யோகம் பயிலுங்கள்
தெளிவு சித்திக்கும்
தீவிரமாய் கேள்வி கேளுங்கள்
தீர்வுகள் முளைக்கும்
தீவிரமாய் மொழி பழகுங்கள்
படைப்புகள் பிரசவிக்கும்
தீவிரமாய் தவம் செய்யுங்கள்
தெய்வம் வந்து முன் நிற்கும்
தீவிரமாய் மனிதம் வளருங்கள்
அமைதி மலர்ந்திடும்
தீவிரமாய் வாழுங்கள்
வாழ்கை கொண்டாட்டமாகும்
வன்மை தீவிரம் ஆகலாம் என்றால்
நன்மை தீவிரம் ஆகலாம் தானே?
ஆகவே தீவிரவாதி ஆகுங்கள்
நீர்த்து போன வாழ்வில் திடம் சேருங்கள்
திரிசூல மலை
பாறைகளும் மரங்களும்
மரம் வாழ் பறவைகளும் குஞ்சுகளும்
நீ முத்தமிட்ட பெண் இவளென்று
கேலி பேசுகின்றன
வந்து என்னவென்று கேளாயோ ?
தினமும் அவசரமாய் அலுவலக பயணம்
அரை மணி நேர பயணத்தில் அழகாய்
நாம் நடத்தும் காதல் குடித்தனம்
இரு சக்கர வாகனத்தில் நான்கு இறக்கை கட்டி
நாம் பறப்போம்
முகம் பார்க்க நேரமில்லை
சில சமயம் உன் உடையின் நிறம் கூட நினைவில்
இருப்பதில்லை
நேற்றிரவு மின்சாரமில்லா தூக்கமும்
கனவில் கண்ட காட்டுப்பூவின் வண்ணமும்
காலையில் என் உதடு சுட்ட தேநீரின் வெப்பமும்
வங்கியின் கையிருப்பும் அண்டை நாட்டின் வன்முறையும் நேற்று படித்த ரமணரின் சரித்திரமும் அத்தனையும் பேசினோம்
புதிதாக முளைத்துள்ள என் ஒற்றை நரைக்கு
அங்கலாய்த்தோம்
அடிக்கும் வெயிலில் அண்டங்காக்கை கூட அடைந்திருக்க
காதல் சாரலில் நனைந்தப
irandha thalaivarkku
இறந்த தலைவருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்
உழைப்பாளர் சிலை அருகே உடம்பிளைக்க ஓட்டம்
மன(ண) முறிவுக்கு பின்
இன்று மண நாள்