நான் தீவிரவாதி

நான் தீவிரவாதி

நான் தீவிரவாதி
என் வேண்டுகோள்
அனைவரும் தீவிரவாதி ஆகுங்கள்

தீவிரமாய் காதல் செய்யுங்கள்
உலகம் ரம்மியமாகும்

தீவிரமாய் யோகம் பயிலுங்கள்
தெளிவு சித்திக்கும்

தீவிரமாய் கேள்வி கேளுங்கள்
தீர்வுகள் முளைக்கும்

தீவிரமாய் மொழி பழகுங்கள்
படைப்புகள் பிரசவிக்கும்

தீவிரமாய் தவம் செய்யுங்கள்
தெய்வம் வந்து முன் நிற்கும்


தீவிரமாய் மனிதம் வளருங்கள்
அமைதி மலர்ந்திடும்

தீவிரமாய் வாழுங்கள்
வாழ்கை கொண்டாட்டமாகும்

வன்மை தீவிரம் ஆகலாம் என்றால்
நன்மை தீவிரம் ஆகலாம் தானே?

ஆகவே தீவிரவாதி ஆகுங்கள்
நீர்த்து போன வாழ்வில் திடம் சேருங்கள்

எழுதியவர் : Madhubala (18-Jun-14, 2:46 pm)
Tanglish : naan theeviravathi
பார்வை : 144

மேலே