நான் நிஜத்திலும் ஏமாளி
நான் நிஜத்திலும் ஏமாளி
எனக்கு பிறக்காதோ ஒரு வழி
இப்படியே சென்றால் நான்
என் செய்வேன் வாழ்வில் இனி
கஷ்டத்தில் வாடுறேனே
இஷ்டப்பட்டு தேடுறேனே
நஷ்டத்தில் வீழ்கிறேனே
தினந்தோறுமே
என் வாழ்வின் சோகங்கள் ஆயிரம்
சொல்லவே இந்நாள் ஓடிடும்
நானும் செய்த பாவங்கள் என்னவோ
இப்படி பரிதவித்து நிற்க்குறேனே
நிம்மதி என் வாழ்விலே
என்றுதான் சேருமோ
கண் விழிகளின் ஈரமும்
என்றுமே தொடருமோ...
நேரமும் கூடவில்லை
நெஞ்சமும் மாறவில்லை
வாழ்க்கையே இதுதான் என்ற
எண்ணம்தான் கூடி போகுதே......