தடையில்லா மின்சாரம் -நாகூர் லெத்தீப்

தடைப்பட்ட
மின்னோட்டம் ஒரே
கொசுகடி
தமிழகமெங்கும் !

விரைந்து
செயல்படும் தமிழகம்
தவணை
முறை மின்சாரம் !

விட்டு விட்டு
வந்திடுவான்
விடாமல் தொரத்திடும்
இருளாண்டி !

ஐயோ எரியுதே
வேதனையா
இருக்குதே
எத்தனை குரல்கள் !

தமிழக இருள்
நிறைந்த வேற்றுகிரகம்
விரைவிலே !

நாவீன காலம்
கடந்த
காலத்தை நோக்கி
மின்தடையால் !

இருளிலே
இருப்பான்
வெளிச்சமிட்டு
மறைவான்
ஒவ்வொரு நாளும்........!

தடையில்லா
மின்சாரம் உறுதிமொழி
பேச்சில் மட்டும் !

ஒருகாலம் வரும்
மின்விளக்கு
எரிவதை தெருவில்
கண்டோம் என !

ஓட்டுபோட்டோம்
வீட்டிலே டப்பா
டான்சு ஆட்டம்
மின் தடையால் !

IPL cricket
எப்படியெல்லாம்
வீன்போகிறது
தமிழகத்தில் மின்சாரம் !

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (18-Jun-14, 1:04 pm)
பார்வை : 100

மேலே