காவேரி

குடகு பெற்ற அருவியே
உலகம் வாழ்த்தும் அழகியே
தலை விரித்தக்கோலம் கொண்டு
தரணியிலே செல்பவளே

ஆடு தாண்டும் அளவிற்கு
சங்குக்கழுத்து உடையவளே
ஆனைகூட மலைக்கின்ற
பரந்த மார் உடையவளே

வளைந்து செல்லும் இடையோடு
நடை போட்டு வருபவளே
சலசல என சத்தமிடும்
சலங்கை ஒலி கொண்டவளே
தமிழ் மணக்கும் மண்மீது
காதல்தனை வைத்தவளே

பலநாளாய் காணவில்லை
எங்கு போனாய் சொல்வாயா ...........?
பறந்து வரும் காற்றினிலே காதலனுக்கு
உன்னிலையை தூது விட மாட்டாயா .......?

காதலோடு மோதல் கொண்டு
வருகை நிருத்திக்கொண்டாயா .......?
ஏங்குகிறான் காதலனே கோபம் விட்டு
கொஞ்சம் எட்டி பார்க்க மாட்டாயா ...........?

மொழி சண்டை வரும் என்ற
பழி கண்டு நின்றாயா ...............?
இல்லை
உன் அப்பன் போட்ட அணையினிலே
அடைபட்டு நின்றாயா ............?

வாடி போன முகத்தினிலே
தாடி வைத்தான் உன் காதலனே
தேடி வர மாட்டாயா ...................? குடகின்
மாடி வீட்டு தேவதையே
படி இறங்க மாட்டாயா ..............?

தடைதன்னை உடைத்தெறிய
பொங்கி எழ மாட்டாயா ............?
தமிழ் பேசும் காதலிடம்
உன்னை தர மாட்டாயா ..........?

எழுந்து வா காவேரி
ஏழை முகம் பூர்த்துவிட
அழித்து வா காவேரி
எதிர்ப்பவர்கள் அலறிவிட

தமிழ் மன்(ண்)னன் காத்திருக்கிறான்
இந்த எளியவனை தூதனுப்பினான்
சொல்லிவிட்டேன் என் கவியை
காதலோடு காத்தருளும் என் புவியை

எழுதியவர் : கவியரசன் (18-Jun-14, 12:43 pm)
Tanglish : kaveri
பார்வை : 117

மேலே