எம் காதல் குடித்தனம்

தினமும் அவசரமாய் அலுவலக பயணம்
அரை மணி நேர பயணத்தில் அழகாய்
நாம் நடத்தும் காதல் குடித்தனம்
இரு சக்கர வாகனத்தில் நான்கு இறக்கை கட்டி
நாம் பறப்போம்
முகம் பார்க்க நேரமில்லை
சில சமயம் உன் உடையின் நிறம் கூட நினைவில்
இருப்பதில்லை
நேற்றிரவு மின்சாரமில்லா தூக்கமும்
கனவில் கண்ட காட்டுப்பூவின் வண்ணமும்
காலையில் என் உதடு சுட்ட தேநீரின் வெப்பமும்
வங்கியின் கையிருப்பும் அண்டை நாட்டின் வன்முறையும் நேற்று படித்த ரமணரின் சரித்திரமும் அத்தனையும் பேசினோம்
புதிதாக முளைத்துள்ள என் ஒற்றை நரைக்கு
அங்கலாய்த்தோம்
அடிக்கும் வெயிலில் அண்டங்காக்கை கூட அடைந்திருக்க
காதல் சாரலில் நனைந்தபடி
நாம் சுற்றினோம்
அதற்குள் என் அலுவலகம் வந்து சேர
உலகம் ஏன் உருண்டையாக இருக்கிறது என்று
நொந்தபடி தரை இறங்கினோம்.
மழையில் நெடுநேரம் விளையாடிய
குழந்தை போல்
உடலெல்லாம் அயர்ச்சி
மனமெல்லாம் மலர்ச்சி
இடைப்பட்ட நேரத்தில் கைபேசியில்
காதல் பேசினோம்
மீண்டும் நாளை மலர்வோம்
நாளை சற்று சீக்கிரமாக
சூரியனை எழுப்ப வேண்டும்

எழுதியவர் : Madhubala (18-Jun-14, 12:20 pm)
பார்வை : 119

மேலே