பிரபாகரன் செ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரபாகரன் செ |
இடம் | : கடலூர் |
பிறந்த தேதி | : 18-Nov-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 216 |
புள்ளி | : 81 |
வீண் சந்தேகம் இல்லை
நான் தந்தேனே என்னை
நீ எனை ஏற்றுக்கொள்வாயா
பொய் கூறவும் இல்லை
மெய் உன்னாலே தொல்லை
நான் என்னென்ன செய்வேனோ
பூ பூக்கவும் இல்லை
தேன் சிந்தவும் இல்லை
நான் எவ்விடம் செல்வேனோ
நிமிடங்களும் நீளமாக
நித்திரையும் தூரம் போக
தினசியின் தேவை யாவும் மறந்துபோகிறேன்
நினைவுகளே நாடியாக
நிழலினையே தேடி போக
உண்மையில் நான் ஊமைபோல் ஆகிறேன்!!!
ஆடை அன்றுபோல் இல்லை
தேகம் கூசுது கண்ணை
ஒரு பார்வை பார்த்துச்செல்வாயா
நீ சொல்லிவிடு என்னை
உயிர் காதல் என்றென்ற சொல்லை
உனக்குள் உயிராக இருப்பேனே
நான் கெஞ்சிகிறேன் உன்னை
வான் விஞ்சிவிடும் என்னை
நீ சொல்லொன்றை ச
இவள் அழகா
இவள் தான் அழகா
இனி ஏதும் இல்லை அழகாய்
கலை உலகின் சிலை இவளா
தினம் தோற்றேன் உருகும் மெழுகாய்
ஆதி உலகின் அதிசயமாய்
பாதி கனவில் தினம் வருவாய்
ஏதும் செய்யேன் எனதறியாய்
ஆதவன் வருமுன் சென்றிடுவாய்
கடிகாரம் நகராமல் ஓடும்
இவள் பார்க்கும் சிறுபார்வை நேரம்
கரையாத நுரை போன்ற தேகம்
இவள் கலையாமல் மிதந்தோடும் மேகம்
கடல் அலைகளை
இவள் தழுவிடும் போது
மணற் பரப்பினை பிரியாது ஈரம்
அந்த நிலவொளியினில்
ஒளி வீசிடும் தேகம்
பகல் இரவு குழப்பத்தில் நீளும்
ஏதும் செய்யாமல் எனதாகினாய்
போதும் என்றாலும் எனை தாக்கினாய்
நாளும் நெஞ்சத்தில் புயல் வீசவே
காதல் பஞ்சத்தில் பசியாக
இவள் அழகா
இவள் தான் அழகா
இனி ஏதும் இல்லை அழகாய்
கலை உலகின் சிலை இவளா
தினம் தோற்றேன் உருகும் மெழுகாய்
ஆதி உலகின் அதிசயமாய்
பாதி கனவில் தினம் வருவாய்
ஏதும் செய்யேன் எனதறியாய்
ஆதவன் வருமுன் சென்றிடுவாய்
கடிகாரம் நகராமல் ஓடும்
இவள் பார்க்கும் சிறுபார்வை நேரம்
கரையாத நுரை போன்ற தேகம்
இவள் கலையாமல் மிதந்தோடும் மேகம்
கடல் அலைகளை
இவள் தழுவிடும் போது
மணற் பரப்பினை பிரியாது ஈரம்
அந்த நிலவொளியினில்
ஒளி வீசிடும் தேகம்
பகல் இரவு குழப்பத்தில் நீளும்
ஏதும் செய்யாமல் எனதாகினாய்
போதும் என்றாலும் எனை தாக்கினாய்
நாளும் நெஞ்சத்தில் புயல் வீசவே
காதல் பஞ்சத்தில் பசியாக
இவள் அழகா
இவள் தான் அழகா
இனி ஏதும் இல்லை அழகாய்
கலை உலகின் சிலை இவளா
தினம் தோற்றேன் உருகும் மெழுகாய்
ஆதி உலகின் அதிசயமாய்
பாதி கனவில் தினம் வருவாய்
ஏதும் செய்யேன் எனதறியாய்
ஆதவன் வருமுன் சென்றிடுவாய்
கடிகாரம் நகராமல் ஓடும்
இவள் பார்க்கும் சிறுபார்வை நேரம்
கரையாத நுரை போன்ற தேகம்
இவள் கலையாமல் மிதந்தோடும் மேகம்
கடல் அலைகளை
இவள் தழுவிடும் போது
மணற் பரப்பினை பிரியாது ஈரம்
அந்த நிலவொளியினில்
ஒளி வீசிடும் தேகம்
பகல் இரவு குழப்பத்தில் நீளும்
ஏதும் செய்யாமல் எனதாகினாய்
போதும் என்றாலும் எனை தாக்கினாய்
நாளும் நெஞ்சத்தில் புயல் வீசவே
காதல் பஞ்சத்தில் பசியாக
இயற்கை எங்கே ?
தென்னை ஓலை விசிறி எங்கே ?
பனையோலை விசிறி எங்கே ?
பல்லாங்குழி எங்கே ?
கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே ?
தெல்லு விளையாட்டு எங்கே ?
கோபி பிஸ் விளையாட்டு எங்கே ?
சாக்கு பந்தயம் எங்கே ?
கில்லி எங்கே ?
கும்மி எங்கே ?
கோலாட்டம் எங்கே ?
திருடன் போலீஸ் எங்கே ?
ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே ?
மரப்பாச்சி கல்யாணம் எங்கே ?
ஊனாங்கொடி ரெயில் எங்கே ?
கம்பர்கட் மிட்டாய் எங்கே ?
குச்சி மிட்டாய் எங்கே ?
குருவி ரொட்டி எங்கே ?
இஞ்சி மரப்பா எங்கே ?
கோலி குண்டு எங்கே ?
கோலி சோடா எங்கே ?
பல் துலக்க ஆலங்குச்சி எங்கே ?
கரிப்பழம் எங்கே ?
கள்ளிப்பழம் எங்கே ?
இளுவான் எங்கே ?
எலந்தை பழம் எங்
நான் காட்டில் வேலை செய்வதை கேவலமாகவும்
அதே கணினியில் வேலை செய்வதை
கௌரவமாக நீ நினைப்பது ஏன்?
ஏர் பிடிக்க கற்றுக்கொடுக்க மறுக்கும் நீ
எனக்கு கார் பிடித்து கற்றுக்கொடுக்க துடிப்பது ஏன்?
உழுது வாழ கற்றுக்கொடுப்பதை விட்டுவிட்டு உழைக்காமல் வாழ்வது எப்படி என்று கற்றுத்தருவது ஏன் ?
ஆசா, பாசம், நேசம், அண்ணன்,தம்பி,அக்கா, தங்கைகளுடன் பிறந்து வளர்ந்த நீ என்னை மட்டும் ஒற்றை பிள்ளையாய் பெற்றது ஏன்?
தாத்தா பாட்டின் கை பிடித்து நடக்க கற்றுக்கொண்ட நீ
என்னை மட்டும்
பெரியோர்களுடன் சேரவிடாமல் தவிர்ப்பது ஏன் ?
மணல் வீடு கட்டி விளையாடிய நீ
என்னை மட்டும் பெரியவனாகியதும் மாட மாளிகைதான் கட்ட வேண்டும் என்
இயற்கை எங்கே ?
தென்னை ஓலை விசிறி எங்கே ?
பனையோலை விசிறி எங்கே ?
பல்லாங்குழி எங்கே ?
கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே ?
தெல்லு விளையாட்டு எங்கே ?
கோபி பிஸ் விளையாட்டு எங்கே ?
சாக்கு பந்தயம் எங்கே ?
கில்லி எங்கே ?
கும்மி எங்கே ?
கோலாட்டம் எங்கே ?
திருடன் போலீஸ் எங்கே ?
ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே ?
மரப்பாச்சி கல்யாணம் எங்கே ?
ஊனாங்கொடி ரெயில் எங்கே ?
கம்பர்கட் மிட்டாய் எங்கே ?
குச்சி மிட்டாய் எங்கே ?
குருவி ரொட்டி எங்கே ?
இஞ்சி மரப்பா எங்கே ?
கோலி குண்டு எங்கே ?
கோலி சோடா எங்கே ?
பல் துலக்க ஆலங்குச்சி எங்கே ?
கரிப்பழம் எங்கே ?
கள்ளிப்பழம் எங்கே ?
இளுவான் எங்கே ?
எலந்தை பழம் எங்
கவிதை எழுத ஆசை பிறந்தது
கருவைத் தேடி மனது அலைந்தது
எண்ணப் பறவை சுற்றித் திரிந்தது
என்னுள் ஏக்கம் பொங்கி வழிந்தது !
எங்கு தேடியும் கிட்டாமல் தவித்தது
எட்டாக் கனியாய் உளமும் நினைத்தது
கிறுக்கிய தாளை கசக்கக் கிழிந்தது
கிடுகிடு வெனவே குப்பை நிறைந்தது !
வான்நிலா பாட ஆர்வம் எழுந்தது
வரியுள் சிக்கிட அடம் பிடித்தது
பரிதியும் எழுத்தில் பதிய மறுத்தது
பக்குவ மில்லா நிலையும் புரிந்தது !
இயற்கை வனப்பு விழியில் பதிந்தது
இதமாய் தொடங்க தடங்கல் வந்தது
அலைகடல் அழகு வசியம் செய்தது
அருவியின் இரைச்சல் சுருதி சேர்த்தது !
தெவிட்டா இன்பம் செவியில் பாய்ந்தது
தென்றல் வருடிட மேனி ச
5 ஆயிரம் சம்பளம் ஆனாலும் சரி .
50 ஆயிரம் சம்பளம் ஆனாலும் சரி
மாத கடைசி என்றால் மாத்திரை விழுங்க பயப்படும்
குழந்தை போல தான் நாம்!!
மளிகை, வீட்டு வாடகை, வாங்கிய கடனுக்கு வட்டி என எல்லாம் போக மாதத்தின்
முதல் வாரம் மட்டுமே கையில் பணமிருக்கும்
மற்ற மூன்று வாரமும் எதையும் தாங்கும் மனமிருக்கும்.
கையேந்தி பவனும் கடவுளாய் தெரியும்
என்றோ காணமல் போன சில்லரை அருமை அன்று புரியும்
கடவுள் பக்தி அதிகம் இல்லை
ஆனாலும் வெள்ளி,சனி,திங்கள் என ஒரு வாரத்தில்
பல ஒரு பொழுதுகள் இருக்கும்
மாத கடைசி
பிறந்த நாள் கூட பிடிக்கவில்லை மாத கடைசியில் வருவதால்!
நண்பனின் திருமணத்திற்க்கு அழைப்பு இருந்தும் போக
இரவு 12 மணி
இப்படி ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்ற எந்த பயமும் இல்லாமல் நாடே நிம்மதியாய் உறங்கிக்கொண்டு இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் காலையில் கண்விழிக்கும் போது தான் அந்த விபரீதத்தின் விளைவு தெரியும், அது வேறொன்றும் இல்லை
மக்களுக்கு பணத்தின் மீதான மோகம் அதிகரித்துவிட்டதால் மக்களை அந்த பைத்தியத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கத்திற்காக
இத்தனை வருடங்கள்
நாம் சேர்த்து வைத்த பணமெல்லாம் இன்று நள்ளிரவு முதல் வெறும் காகிதங்களாகவே கருதப்படும், அவற்றிற்கு எந்த ஒரு மதிப்பும் கிடையாது,
என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது,
தங்கம் மட்டும் எப்போதும் போல் ஒரு விலைமதிப்புமிக்க உலோகமாக கருதப்படும்!