இவள் எனக்காக

இவள் அழகா
இவள் தான் அழகா
இனி ஏதும் இல்லை அழகாய்
கலை உலகின் சிலை இவளா
தினம் தோற்றேன் உருகும் மெழுகாய்

ஆதி உலகின் அதிசயமாய்
பாதி கனவில் தினம் வருவாய்
ஏதும் செய்யேன் எனதறியாய்
ஆதவன் வருமுன் சென்றிடுவாய்

கடிகாரம் நகராமல் ஓடும்
இவள் பார்க்கும் சிறுபார்வை நேரம்
கரையாத நுரை போன்ற தேகம்
இவள் கலையாமல் மிதந்தோடும் மேகம்
கடல் அலைகளை
இவள் தழுவிடும் போது
மணற் பரப்பினை பிரியாது ஈரம்
அந்த நிலவொளியினில்
ஒளி வீசிடும் தேகம்
பகல் இரவு குழப்பத்தில் நீளும்

ஏதும் செய்யாமல் எனதாகினாய்
போதும் என்றாலும் எனை தாக்கினாய்
நாளும் நெஞ்சத்தில் புயல் வீசவே
காதல் பஞ்சத்தில் பசியாக்கினாய்

தேவதை நடமாடும் நேரம்
திசை எங்கும் திருநாளாய் மாறும்
தேன் போன்ற இவள் பேச்சின் வேகம்
திருநாளின் இசையோடு சேரும்
பல அசைவுகளை
இவள் புரிந்திடும் நேரம்
எட்டு திசை மறக்கும் போதை ஏறும்
மறு தெருமுனையினை
இவள் கடந்திடும் போது
மனம் பரிதவிப்பினில் பலவனமாய் மாறும்

எழுதியவர் : பிரபாகரன் (29-Jun-16, 9:35 pm)
Tanglish : ival enakkaga
பார்வை : 248

மேலே