தொலைந்தேனே உன்னுள்ளே

என் கண்ணும்
என் இதயமும்
ஏனோ என்னை மாற்றியதடி
ஏமாற்றியதடி
நீ பார்த்த பொய் பார்வையால்
என் பார்வை பறி போனதடி
நீ சிரித்த பொய் சிரிப்பால்
என் சிரிப்பும் மரித்து விட்டதடி
என் கனவு கற்பனை ஓவியமே
என் கனவு கற்பனை ஓவியமே
நாம் என்ற கற்பனை
எனை சூழ
தொலைத்தேனே எனையும்
நான் உன்னுள்ளே