எங்கே இவைகள்
இயற்கை எங்கே ?
தென்னை ஓலை விசிறி எங்கே ?
பனையோலை விசிறி எங்கே ?
பல்லாங்குழி எங்கே ?
கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே ?
தெல்லு விளையாட்டு எங்கே ?
கோபி பிஸ் விளையாட்டு எங்கே ?
சாக்கு பந்தயம் எங்கே ?
கில்லி எங்கே ?
கும்மி எங்கே ?
கோலாட்டம் எங்கே ?
திருடன் போலீஸ் எங்கே ?
ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே ?
மரப்பாச்சி கல்யாணம் எங்கே ?
ஊனாங்கொடி ரெயில் எங்கே ?
கம்பர்கட் மிட்டாய் எங்கே ?
குச்சி மிட்டாய் எங்கே ?
குருவி ரொட்டி எங்கே ?
இஞ்சி மரப்பா எங்கே ?
கோலி குண்டு எங்கே ?
கோலி சோடா எங்கே ?
பல் துலக்க ஆலங்குச்சி எங்கே ?
கரிப்பழம் எங்கே ?
கள்ளிப்பழம் எங்கே ?
இளுவான் எங்கே ?
எலந்தை பழம் எங்கே ?
சீம்பால் எங்கே ?
ரோசம் வளர்த்த கொங்க மாட்டுப்பால்எங்கே?
பனம் பழம் எங்கே ?
சூரிப்பழம் எங்கே ?
பழைய சோறு எங்கே ?
நுங்கு வண்டி எங்கே ?
பூவரசன் பீப்பி எங்கே ?
கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே ?
நடைபழக்கிய நடை வண்டி எங்கே ?
அரைஞான் கயிறு எங்கே?
அன்பு எங்கே ?
பண்பு எங்கே ?
பாசம் எங்கே ?
நேசம் எங்கே ?
மரியாதை எங்கே ?
மருதாணி எங்கே ?
சாஸ்திரம் எங்கே ?
சம்பரதாயம் எங்கே ?
விரதங்கள் எங்கே ?
மாட்டு வண்டி எங்கே ?
கூட்டு வண்டி எங்கே ?
ஆழ உழுத எருதுகள் எங்கே ?
செக்கிழுத்த காளைகள் எங்கே ?
எருமைமாடு எங்கே ?
பொதி சுமந்த கழுதைகள் எங்கே ?
பொன் வண்டு எங்கே ?
சிட்டுக்குருவி எங்கே ?
குயில் பாட்டுபாடும் குயில் எங்க?
குரங்கு பெடல் எங்கே ?
அரிக்கேன் விளக்கு எங்கே?
விவசாயம் எங்கே ?
விளை நிலம் எங்கே ?
ஏர்கலப்பை எங்கே ?
மண் வெட்டி எங்கே ?
மண்புழு எங்கே ?
வெட்டுமண் சுமந்த பின்னல் கூடை எங்கே ?
பனை ஓலை குடிசை எங்கே ?
தூக்கனாகுருவி கூடு எங்கே ?
குளங்களில் குளித்த கோவணங்கள் எங்கே ?
அந்த குளங்களும் எங்கே ?
தேகம் வளர்த்த சிறுதானியம் எங்கே ?
ஆட்டுக்கல் எங்கே ?
அம்மிக்கல் எங்கே ?
மோர் சிலுப்பி எங்கே ?
கால்கிலோ கடுக்கன் சுமந்த காதுகள் எங்கே ?
நல்லது கெட்டது சுட்டிக்காட்டும் பெரியவர்கள் எங்கே ?
வெத்திலை பாக்கு பரிசங்கள் எங்கே ?
தோழிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டும் எங்கே ?
பிள்ளைகளை சுமந்த அம்மாக்களும் எங்கே ?
தாய்பாலை தரமாய் கொடுத்த தாய்மையும் எங்கே ?
மங்கலங்கள் தந்த மஞ்சள் பை எங்கே ?
மாராப்பு சேலை அணிந்த பாட்டிகள் எங்கே?
இடுப்பை சுற்றி சொருகிய சுருக்கு பணப்பையும் எங்கே ?
தாவணி அணிந்த இளசுகள் எங்கே ?
சுத்தமான நீரும் எங்கே ?
மாசு இல்லாத காற்று எங்கே ?
நஞ்சில்லாத காய்கறி எங்கே ?
பாரம்பரிய நெல் ரகங்களும் எங்கே ?
எல்லாமையும் விட முன்னோர்கள் வாழ்ந்த
முழு ஆயுள் நமக்கு எங்கே ?
காகிதத்தை தேடி ஓடும்
காக்கை கூட்டமே
கணநேரம் சிந்திந்து பாருங்கள்
நாகரிகத்தை நாக்கில் கொண்டு
வாழ நினைக்கிறீர்கள்
வாளால் வீழ்ந்தவனை விட
நாவால் வீழ்ந்தவனே அதிகம்
நினைத்து பார்த்து நிம்மதியை தேடுங்கள்...