அன்று நீஇன்று நான்

அன்று நீ.

உன் மழலை பேச்சில்
நான் மயங்கினேன்
உன் சுட்டி தனத்தில்
நான் மகிழ்ந்தேன்.

நீ தவழும் போது
நானும் உன் பின்னால்
தயக்கத்துடன்
தாவியே வந்தேன்..

நீ தத்தி தத்தி
நடை பழகையில்
நானும் உன் பின்னால்
தத்தியே வந்தேன்.

இன்று நான்.

நடக்க முடியவில்லை
முட்டு வலி
பேச முடியவில்லை
தொண்டை வலி.

என் அருகில் நீ
வராதது ஏன் கண்ணா
கண்ணும் கருத்துமாய்
வளர்தேனே உன்னை.

முதுமை முடியவில்லை
எனக்கு
இளமை இசைக்கிறதா?.
உனக்கு..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (30-Dec-14, 11:03 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 59

மேலே