கண்ணாளனே

கண்ணாளனே !
------------------------------------------

நீ அருகினில்
இருக்கையில்,
அலை மோதும்
நெஞ்சம்.
உயரும் புருவங்கள் ,
திமிரும் தோள்கள் ,
காரணம் அறியாமல்
விரியும் இதழ்கள்
மயக்கத்தில்
கிரங்கச் செய்யும்
பெண்மை.
அயராமல் உன்னை
ஆராதிக்கும் ஆன்மா..
தயங்காமல்
வியக்க செய்யும்
உன் எண்ணம் ..
என்பு முதல்
மச்சை வரை
எங்கும் உன்
படையெடுப்பு.
என்றும் உன்
அரசாட்சி.

பல நூறு
ஆடவரில்
என்னை
அண்ணார்ந்து
பார்க்கவைத்த
ஆண்மகனே

உனக்கெனவே
பிறந்தேன் ..
பெண்ணானேன் . .

ஆனந்தத்தில்
ஆர்ப்பரிக்கும் - என்
கண்கள் சாட்சி

காதலிக்கிறேன் உன்னை
உன்னை மட்டும்.

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (4-Aug-18, 6:39 pm)
சேர்த்தது : Nishan Sundararajah
பார்வை : 251

மேலே