என்னவளே

என்னவளே !
----------------------------------------------------------
காதலெனும் கடவுச்சீட்டில்
என்னுள் நுழைந்தவளே ..
கடற்கரை மணல் மேல்
கால்தடம் போல் கரையாமல் .
கல்லறை கடந்தும்
காவியமாய்
தொடர்வாயென.
உன் பிஞ்சுப்பாதம்
கொண்டு வைக்கும்
அடிகள் என்றும்
தொடருமென
உறுதி செய் ..
இதய அறையில்
இடம் தந்து
காலம் முழுதும்
காக்கிறேன்
கண்ணின் மணிபோல் ..
கண்மணியே..
-நிஷான் சுந்தரராஜா -