அவள் பெயர் வெண்ணிலா
தனிமையை உடைத்தெறிக்க
கைக்கோர்த்து உலாவ-அந்த
நீலவானத்து நிலாவை
கடவுளிடம் வேண்டினேன்.
வீட்டருகில்
புதிதாய் குடியேறிருந்தாள் "வெண்ணிலா".
நான் சொல்லும் கவி
நிலாவைவிட வெண்ணிலாவையே ஈர்த்ததுப்போல
வெண்ணிலா மனைவியாகிருக்கிறாள்..!
யாருக்கு நன்றியை கூறுவது?
கடவுளுக்கா..?
கவிப்பாட வைத்த நிலாவுக்கா..!
நிலாவுக்குதான்..!
நான்தான் கடவுள்மறுப்பாளனாயிற்றே..!
-நேமா