நேமா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நேமா
இடம்:  பவானி
பிறந்த தேதி :  18-Jan-1995
பாலினம்
சேர்ந்த நாள்:  31-Jul-2018
பார்த்தவர்கள்:  128
புள்ளி:  22

என் படைப்புகள்
நேமா செய்திகள்
நேமா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2020 6:51 pm

நான்
முத்தமிட துடிக்கும்-அவளின்
எழில் கரம்
முடிகம்பியில் மீட்டும்
காதல் இசையை கவனிப்பதா..!
இல்லை வெட்கி குனியும்
அவளின் நானத்தை ரசிப்பதா..!
ஒன்று நிச்சயம்,
ஒவ்வொரு தலைவருடுவதிலும்
நான் தொலைவது..!
- நேமா

மேலும்

நேமா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2019 6:33 pm

மகிழ்கிறேன் வதைகிறேன்
குளிர்கிறேன் எரிகிறேன்
பறக்கிறேன் வீழ்கிறேன்
கனவுகளில் வாழ்கிறேன்
குறுக்கு வெட்டுத்தோற்ற
உணர்வுகளில் பதிகிறேன். காதலில் நம்பிக்கையற்றவர்கள் காதை தயவுகூர்ந்து அடைத்துக் கொள்ளுங்கள்,காதலில் கரைந்தவனின் கதறல் இப்படியும் இருக்கலாம்..!

மேலும்

நேமா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2019 7:27 pm

அவளின்
குறுகிய நெற்றியில்
முதன்முதலாய்
கொடுத்த முத்தம் இன்னும்நினைவிருக்கிறது!
இப்போதோ,அது
வாடிக்கையாகிவிட்டது...

தொடங்கிவிட்டால்,
ஒன்றோடு நிறுத்தியதே இல்லை...
நெற்றி கன்னம் இமைகளுமாய்
இதம்பரப்பிக்கொண்டேயிருக்கும் உதட்டுக்கு ஓய்வேயின்றி போகும்!

'முத்தம்'
நாளங்களில் ரத்தத்தை பீய்சியடிக்கும் அபரிமிதமான ஓர்உணர்வு..!
ஓர் நிகழ்வு..!
-நேமா

மேலும்

நேமா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2019 6:36 pm

இளமை கடந்து
உச்சி வெளுத்தாலும்
வீசிக்கொண்டே இருக்கிறது - அவளின்
அதே இருபதுவயது
கூந்தலின் வாசம்..!
-நேமா

மேலும்

நேமா - robharathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2019 1:02 pm

கண்ணுக்குள்ள நின்னுகிட்டு
ஊசியில குத்துறியே !
நெஞ்சிக்குள்ள நீ கிடந்து
மூச்சி முட்ட வைக்கிறியே !
மறந்து போக வழியும் இல்ல
மறச்சிம் வைக்க முடியவில்ல !
உன்கூட நான் இருக்க
உறவொன்னும் தேவையில்ல !

மேலும்

அருமை 03-Feb-2019 1:53 pm
நேமா - நேமா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Aug-2018 2:23 pm

கச்சை நூலாக்கொண்ட உடை-கோடி
உணர்வுகளை தூண்டிய நடை
ஆஜானுபாகு உடலில்லை-அரைக்குறை
சுதந்திரத்தில் உடன்பாடில்லை
முதிர் அகவு தோன்றியதில்லை
சிறைச்செல்ல அஞ்சியதில்லை
தகிடதோம் தகிடதோம்
அறவழி போராட்டத்தின் மெய்களை
வெளிக்காட்டினாய்
அகிலத்திற்க்கு அகிம்சையை தந்து
வழிக்காட்டினாய்
என்றும் வாழுமே உன் கொள்கை..!
மறந்துதான் போய்விடுமா! உம் செய்கை..!
அறவழியை இன்றும் பின்பற்றினோம்
ஜல்லிக்கட்டிலும் ஜெயித்துக்காட்டினோம்
தகிடதோம் தகிடதோம் தகிடதோம்...!
என்றும் ஜெயிப்போம் தகிடதோம்..!

மேலும்

ஆதரவுக்கு நன்றி 02-Sep-2018 9:37 am
இனிமை . கச்சை நூலாக்கொண்ட உடை-கோடி உணர்வுகளை தூண்டிய நடை 31-Aug-2018 1:27 pm
நேமா - அஷ்றப் அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Aug-2018 1:06 pm

கண்ணில் கலந்தாள் கனவினில் மிதந்தாள்
எண்ணம் யாவும் இனிக்கும் வண்ணம்
என்னில் செய்தாள் அன்பின் இழையை
அழகாய் எடுத்து என் நெஞ்சில் நெய்தாள்
தினமும் எந்தன் நினைவினைக் கொய்தாள்


அஷ்ரப் அலி

மேலும்

மிக்க நன்றி அன்பின் நிஷான் 29-Aug-2018 10:38 am
மிக்க நன்றி அன்பின் குணசேகரா 29-Aug-2018 10:35 am
வாழ்த்துக்கும் வரிகளுக்கும் மிக்க நன்றி அன்பின் மலர்1991 29-Aug-2018 10:33 am
மிக்க நன்றி அன்பின் நேமா 29-Aug-2018 10:31 am
நேமா - Nishan Sundararajah அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Aug-2018 12:33 pm

தாமி (SELFIE)
--------------------------------

உளி இன்றி
வலி இன்றி
தன்னைத் தானே
செதுக்கிக்கொள்ள
வழி சமைத்தது - அழகு
சிலை அமைந்தது
SELFIE ( தாமி) வடிவில்.

- நிஷான் சுந்தரராஜா -

மேலும்

நன்றி தோழரே .. வருகைக்கும் .. வாழ்த்துக்கும் ! 06-Aug-2018 1:11 pm
அருமை 06-Aug-2018 12:57 pm
உண்மை. ஆனால் " செலஃபீ " மோகம் பலவிதத்தில் வலிகளை தருகிறதே 05-Aug-2018 9:05 pm
நேமா - நேமா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Aug-2018 5:32 pm

தனிமையை உடைத்தெறிக்க
கைக்கோர்த்து உலாவ-அந்த
நீலவானத்து நிலாவை
கடவுளிடம் வேண்டினேன்.
வீட்டருகில்
புதிதாய் குடியேறிருந்தாள் "வெண்ணிலா".
நான் சொல்லும் கவி
நிலாவைவிட வெண்ணிலாவையே ஈர்த்ததுப்போல
வெண்ணிலா மனைவியாகிருக்கிறாள்..!
யாருக்கு நன்றியை கூறுவது?
கடவுளுக்கா..?
கவிப்பாட வைத்த நிலாவுக்கா..!

நிலாவுக்குதான்..!
நான்தான் கடவுள்மறுப்பாளனாயிற்றே..!
-நேமா

மேலும்

அருமையான கருத்து நண்பரே,நன்றியும் 05-Aug-2018 1:19 pm
அருமை . கடவுளாய் இருந்தாலும் நிலாவாய் இருந்தாலும் நன்றியை " கட உள் " க்கே சொல்லுங்கள் . ( கட உள் = உள்ளே கிடப்பது ) 05-Aug-2018 1:02 pm
மேலும்...
கருத்துகள்

மேலே