உதட்டுக்கு ஓய்வில்லை
அவளின்
குறுகிய நெற்றியில்
முதன்முதலாய்
கொடுத்த முத்தம் இன்னும்நினைவிருக்கிறது!
இப்போதோ,அது
வாடிக்கையாகிவிட்டது...
தொடங்கிவிட்டால்,
ஒன்றோடு நிறுத்தியதே இல்லை...
நெற்றி கன்னம் இமைகளுமாய்
இதம்பரப்பிக்கொண்டேயிருக்கும் உதட்டுக்கு ஓய்வேயின்றி போகும்!
'முத்தம்'
நாளங்களில் ரத்தத்தை பீய்சியடிக்கும் அபரிமிதமான ஓர்உணர்வு..!
ஓர் நிகழ்வு..!
-நேமா