பூக்கள் மலர்கின்றன இங்கே
பூக்கள் மலர்கின்றன இங்கே
தோட்டத்தில்
அவள் வந்து பறிக்கக் காத்திருக்கிறது
மேகங்கள் சூழ்கின்றன இங்கே
வானத்தில்
புல்வெளிகள் நனைய காத்திருக்கிறது
இருவிழிகள் புன்னகையில் விரிகின்றன இங்கே
மௌனத்தில்
ஒரு காதல் கவிதை எழுதக் காத்திருக்கிறது !