மரியாதைக்குரிய பாரத பிரதமருக்கு

மரியாதைக்குரிய பாரத பிரதமருக்கு !

உங்கள் வெற்றி விமரிசை
களியாட்டத்தை
விமர்சனம் செய்யும்
எண்ணமில்லை !

உங்கள்..
பதவியேற்பு விழாவில்
ஒரு கருப்பு ஆடும்
நுழைந்துவிட்டதே
சிவப்பு கம்பள வரவேற்பில்
என்ற ஆதங்கத்தில் எழுதுகிறோம் .

உங்கள் அழைப்பின் பேரில்
வந்தது ..பெயர் சூட்டப்படாத
பேரினவாதம் பெற்றெடுத்த
பிள்ளை ..அது நீங்கள் அறிந்ததே.

நீங்கள் சமரசம் செய்து
சாமரம் வீசுவது ..
பசுந்தோல் போர்த்திய
புலி !
சர்வதேசத்தின் முன்
சரளமாய் நடமாடும்
விளங்கிடப்படாத
நடப்புக் கால சகுனி !

இதை யார் மூடி மறைத்தாலும்
மோடி மறந்திருக்க வாய்ப்பில்லை
நாம் உம்மை சாடவில்லை ..
நாடி நிற்கிறோம் என்பதை
நினைவு படுத்துகிறோம் .

பெருவாரியாக நீங்கள்
பெற்ற வாக்குகள்
எதிரொலிப்பது - எம்
தொப்புள் கொடி
உறவுகளின் ஏக்கங்கள் !

இன்று பாரதத்தில்
தாமரை மலர ..
வித்திட்டது என்னமோ
காந்தியம் தான் ..
விழிநீர் கொண்டு சத்திட்டது
திராவிடம் !

"உப்பிட்டவரை உள்ளளவும் நினை"
என்பது நியதி ..
எம் கடமை முடிந்தாயிற்று ..
நினைப்பதும் ..மறப்பதும்
உங்களுக்கே வெளிச்சம் !

உங்கள் பதவிக்காலம்
முடிவுக்குள்ளேனும்..
எங்கள் விடிவுக்காலத்தை
எதிர்பார்த்து .....

- ஈழத் தமிழ் -

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (27-May-14, 12:15 am)
பார்வை : 146

மேலே