விட்டதை பெற வேண்டும் பெற்றதை விட வேண்டும்

அடுத்தவர் குறை கூறி
தன் குறை மறைத்து
வாழ்ந்துடுவர்
வளம் பெற்றிடுவார்
பல பேர்!!
பிறர் சிந்தனையில்
வாழ்ந்து
தன் சிந்தனை ஒடுக்கி
தலை நிமிர்ந்து
வாழ்வேன் என்று
ஏமாறும் பல பேர்!!
மற்றவருக்காய் தனை
மாற்றி
தன் சுகமிழந்து
பெருமை காட்டி
தாழ்ந்திடுவார் பல பேர்!!
தினம் பல கடந்தும்
திங்கள் பல தேய்ந்தும்
தன்னிலை மாற்றாமல்
தான்தோன்றியாய்
வாழும்
திருந்திடா ஜென்மமிவர்!!
பிறந்ததின் பயனை
பெற்றிடாது
மாற்றான் குறை கூறி
மனமதை நோகச் செய்து
மதி கலங்கியே வாழும்
மதி கெட்ட மாந்தர் இவர்!!
ஒழுக்கம் பல இருக்க
ஒழுகிடா உளம் கொண்டு
ஓர் கை ஓசை
இவன் நப்பாசையாகி
ஓரங் கட்டியே அனாதையாகும்
மாந்தர் இவர்!!!
ஒற்றுமை குலைந்திடின்
பகைமை வளர்ந்திடின்
கை கொட்டி சிரித்து
மகிழ்ந்து
அறியாமை வௌிப்படுத்தும்
பேதையர் இவர்!!!
எம்மில் வளர வேண்டும்
உயர வேண்டும்
பகைமையல்ல
பிரிவல்ல
நல்ல குணங்கள் உள்ள
மனங்கள்!!
நம்மில் சிறக்க வேண்டும்
மிளிர வேண்டும்
பொறாமை அல்ல
சிறுமையல்ல
நமை உயர்த்தும்
உயர் பண்புகள்!!
விட்டதை பெற வேண்டும்
பெற்றதை விட வேண்டும்
பெற்ற இழிவல்ல
விட்ட நல்ல
கூடி வாழும்
நல்ல வாழ்வதனை!!!