சூரியனே
சூரியனே ...நீ
சுட்டெரிப்பவன்தான்
ஆனால் ?
உன்னால்தான்
ஒரு நிலவினை
குளிரூட்டமுடிகிறது ...
ஒரு மெல்லிய மலரினை
மலரச்செய்ய முடிகிறது ...
ஒரு பனித்துளியை
பவித்ரமாக்க முடிகிறது ...
ஒரு மேகத்தினை
மோகமுறச் செய்யமுடிகிறது
உன்னால் மட்டும் எப்படி
வெப்பத்தையும் ..குளிர்ச்சியையும்
கடினத்தையும் ..மென்மையையும்
கலந்து காட்டமுடிகிறது ...
பகலவனே
அந்த
பக்குவத்தை
எனக்கும் கற்றுத்தா..
உள்ளுக்குள் இருந்து
உலைவைப்பவனை
உருக்கிவிடுவதில்
உன்னைப்போல்
ஒரு நெருப்பு உலையாக !
சுரண்டல்காரர்களின்
சுயநலங்களை ...
சுயநலகாரர்களின்
சுவாசங்களை
சுட்டெரிப்பதில்
உன்னைப்போல்
ஒரு சூரிய கதிராக ...
ஆனாலும்
நீ
கற்றுக்கொடு
உன்மென்மையினை
அதன் குளிர்ச்சியினை
என் மனதிற்கும்