அழகி ஜாரே
அழகி ( ஜாரே )
------------------------------------------
காரிகை இவள்
தோரணை , தூவல்
தூவாத காவியம் ..
தூரிகை தீட்டாத
ஓவியம்.
கரிக்கோல்
கொண்டமைந்த
பனிக்கூழ் - இவள்
அன்பின் திறவுகோல்
செந்தூரம் சூடாமல்
அரிதாரம் அணியாமல்
பாவனை செய்யாமல்
சிறு பார்வையிலே
சிறைபிடித்தாள்.
இன்னட்டு நிறத்தவள்
இவள் தென்பட்டாள்
தாள்திறவா
ஆழ் மனதில்
பிணிக்கை இன்றி
பின்னிப்போனது
அவள் அழகு முகம்.
- நிஷான் சுந்தரராஜா -