அலைபேசி செல்போன்

அலைபேசி (செல்போன்)

எல்லோரின் கைகளிலும் உரிமையாக விளையாடுகிறது... 

ஓய்வுக்கு ஓய்வுதந்து ஓயாமல் உழைக்கிறது... 

உறவுகளிடையே பாலமாக பரிணாமம் அடைந்துள்ளது... 

காதலர்களின் நண்பனாக நற்செய்தி தருகிறது... 

முக்கியச்செய்திதனை முந்திக்கொண்டு தருகிறது... 

உணர்ச்சிப் பரிமாற்றங்களை சலனமில்லாமல் கடத்துகிறது... 

தொழில்நுட்ப வளர்ச்சிகளை பாமரனுக்கும் போதிக்கிறது... 

இணையில்லா இணைப்புகளை இணையம் மூலம் நம்மோடு இணைக்கிறது... 

தூரங்கள் சென்றாலும் யாருக்கும் பிரிவின் வலியைத் தராமல், துரத்த உதவுகிறது... 

தொண்டு செய்யும் எண்ணங்களை செயலிகளால் உணர்த்துகிறது... 

எல்லையில்லாமல் எல்லாவற்றையும் சொல்லித் தருகிறது... 

கனவுகள் மெய்ப்பட கனவுகளின் வடிவமாக பிறந்து இருக்கிறது...

எழுதியவர் : ஜான் (4-Aug-18, 3:22 am)
சேர்த்தது : ஜான்
Tanglish : alaipesi
பார்வை : 930

மேலே