கவிஞன்
பூக்கள் கொண்டு போர்புரிவான்
கூறிய ஆயுதம் கொண்டும் ஓவியம் வரைவான்
வலிய எண்ணங்களாலேயே கொடிய நோய்கள் அறுப்பான்.
வார்த்தைகளிலே வாள்வீச்சு
வாசிப்புகளிலேயே முழுமூச்சு
மொழி அவனின் உயிர்நாடி .
கற்பனையை கட்டிக்கொள்வான்,
பல பொய்யின் மேல் பயணம் செய்வான்
எனினும் ,
உட்கரு சிதையா உண்மை தருவான்.
அவன்காதல் கொள்வது கன்னியை
மட்டுமல்ல ,
அவன்கண்ணில் பட்ட ,
இந்த மண்ணில் பட்ட ,
அவன் எண்ணம் தோட்ட
எல்லாம் கொண்டு
காலம் முழுதும் இனிய
காதல் செய்வான் .
ஓற்றை சொல் விதைத்து ,
பெரும் காவியம் விளைவிப்பான்.
பெரும் காவியம் சுருக்கி,
சிறு ஹைக்கூவும் தருவிப்பான்.
பார்ப்போருக்கு தோன்றும்
அவன் சிறுகூட்டு பறவைபோல் ,
பெரும்பிரபஞ்சமே அவனுள்
சிறைப்பட்டு விளையாடும்.
பொருள் யாசிக்கவோ ,
பசிபோக்கிக்கவோ ,
புகழ் நேசிக்கவோ,
அல்ல அவன் கவிதை .
பசி மறந்தும் பல கவி படைப்பான்
அதன் பொருளுணர்ந்து
உள்ளம் களிப்பான்.