பித்தனும் விடப்பாம்பும்
பித்தனும் விடப்பாம்பும்
******************************************
ஊர்வரக் கண்டெழும்பி தீப்பிழம்பு போல் கனன்று
சீறுகின்ற விடப்பாம்பும் சிந்தைகெட்டு தன்னெதிரே
மீறுகின்ற இன்னிசையாம் பிடாரன் தன் மகுடி இசைச்
சாறு உண்டு சதிராடும் ! பித்தனின் பரவசம்போல் !!
( சென்ற வாரம் சந்தை ஒன்றில் பாம்பாட்டியின்
வித்தையினை கண்டபோது என்னுள் ஏற்பட்ட
மன விளையாட்டு -- இப்புனைவு )