அதிகம்
கடலின் ஆழத்தைவிட
மனதின் ஆழம்
அதிகமோ?
கடல் நீரின்
உப்பை விட
கண்ணீரில் உப்பு
அதிகமோ?
அன்பின் ஆழத்தை விட
வெறுப்பின் ஆழம்
அதிகமோ?
மொழிகளின் ஆழத்தை விட
மௌனத்தின் ஆழம்
அதிகமோ?
என்னில் என்னை
தேடியதை விட
உன்னை என்னில்
தேடியது அதிகமோ?
அதிகமாகிப் போன
ஒவ்வொன்றும்
என்னில் அதிகமாகிப்
போனது அதிகமோ.............?
..................சஹானா தாஸ்!