இதுவும் ஓர் காதல் வரலாறு

காதலால் ....

மனதை பரிமாறிகொண்டோம்
மதி இருப்பதை மறந்தோம் ..
ஊன் உறக்கம் வெறுத்தோம்
தனிமையை தருவித்தோம்
நேரத்தை வீணடித்தோம் ...

கனவுகள் களைந்தோம்
நினைவில் கலந்தோம்
கடமைகளை காற்றில் விட்டோம்
லட்சியங்களை தள்ளி வைத்தோம் ...

நண்பர்களை நம்பினோம்
பெற்றோரை தூக்கி எறிந்தோம்
அவர்களின் அன்பை அலட்சியப்படுத்தினோம்
பாதுகாப்பை கையூட்டாக நினைத்தோம் ...

உணர்வுகளை ஊனமாக்கினோம்
உரிமையை பறிக்கொடுத்தோம்
வாழ்க்கைகாக வாதிட்டோம் ...

உறவுகளால் உதரபட்டோம்
சமுகத்தால் விமர்சிக்கப்பட்டோம்
சாபங்களை சன்மானமாய் சகித்தோம் ...

அனைத்தையும் இழந்து ...

திருமணம் புரிந்து
காதல் சிம்மாசனத்தில் அமர்ந்து
வெற்றி வாகை சூடியதாய்
பெருமிதத்துடன்
மார்த்தட்டும் வேளையில்தான் ....

காதல் களத்தில்
வென்று குவித்த வெற்றி
மாபெரும் போர்க்களத்திற்கு
வித்திட்டிருக்கும் ...

மடமையை உணர்ந்தோம்
அறியாமையால் அலறினோம்
ஆற்றாமையால் அழுது புலம்பினோம்
சேர்ந்து இருந்தும் சோர்ந்து இருந்தோம்
இணைந்தும் இன்பம் இழந்தோம் ...

இறந்தகாலம் வெறுமையாகி
நிகழ்காலம் நிழலின்றி
எதிர்காலம் கேள்விக்குறியாகி

வாழ்க்கை பரிட்சையின்
விடை புரியாமல்
விரகிதியில் விழுந்தோம் .....

இதுவும் ஓர் காதல் வரலாறு ........

எழுதியவர் : ஏழிசைவாணி (20-May-14, 10:27 pm)
சேர்த்தது : EZHISAIVAANI
பார்வை : 126

மேலே