என்னாசை நான் சொன்னேன்

என்னாசை நான்
சொன்னேன் உயிராக நீ
என்றாய்...........!
கை அசைவால்
நீ என்றேன் கண் அசைவால்
நான் என்றாய்............!
மௌனத்தை
நான் கொண்டேன் நேசத்தில்
நீ என்றாய்...........!
நினைவெல்லாம்
நீ என்றேன் கனவெல்லாம்
நான் என்றாய்.........!
உறவெல்லாம்
நீ என்றேன் உடலெல்லாம்
நான் என்றாய்..........!
திசையெல்லாம்
நீ என்றேன் உன்னோடு
நான் என்றாய்..........!
தவிப்பெல்லாம்
நீ என்றேன் தயக்கத்தில்
நான் என்றாய்...........!
உன்னோடு
நான் என்றேன் என்னோடு
நீ என்றாய்............!
தொடக்கத்தில்
நான் என்றேன் - எனது
முடிவிலும் நீ என்றாய்..........!