விடை பெறுகிறேன்

விடை பெறுகிறேன் !
-------------------------------------

கல்லான என் இதயம் தட்டித் தட்டி
காதலை எழுப்பினாய் - இன்று
முள்ளான காட்டில் எனை முடக்கிவிட்டு ,
காதல் கல் என்கிறாய் .

காயம் கொண்ட என்
இதயத்தின் வலிகளே - கவிதைகளாயின
காதலை விதைத்த நீயே - காரணம் ஆகினாய்.

உன்னை நினைத்து நினைத்து அழுது
கண்கள் மட்டும் தான் ஈரமாகின..
உன் இரு செவியோ ...இதயத்தையோ
அது எட்டவில்லை .

மரணம் கூட நம்மை சேர்க்காது போலும்
என்னைக் கருவறுத்த நீயும் .
உன் மேல் கவி வடித்த நானும்
சொர்க்கத்தில் சேர்வது சாத்தியமில்லை.

என்னை நேசிக்க மறந்தவளே - நான்
சுவாசிக்க மறந்துவிட்டேன் ...

விடை பெறுகிறேன் ..
தொடர்கிறது என் இறுதி ஊர்வலம்.

- நிஷான் சுந்தரராஜா -
2016.04.17

.

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (17-Apr-16, 12:40 am)
பார்வை : 1205

மேலே