கோழையின் அன்பு பாவம் - முஹம்மத் ஸர்பான்

தோளில் சாய்ந்து சாகவே
சாவைக் கூட கேட்கிறேன்
நிழலாய் காய்ந்து தாகவே
பாலை நீராய் தாவினேன்
துண்டு துண்டாய் ஏனம்மா
என்னை கூறு போடுறாய்
ஒரு பிள்ளை போல நீயடி
இதய நதியில் பாய்கிறாய்
மார்பின் மேலே பாரமாய்
ஒரு கனவு வந்து வளருது
கண்களின் ஓரம் ஈரமாய்
நீ வந்து வந்து பார்க்கிறாய்
நீயாகி மழை வந்த - போது
குடையின்றி நனைந்தேன்
கைக்குட்டைச் சுவர்களில்
கனவை காயப்போட்டேன்
நிலவு கூட ஜன்னல் - வழி
என் நிலவை எட்டிப் பாக்க
காளான்கள் மேலே நின்று
நிலவை சிறைப்பிடிப்பேன்
ஒரு நொடிப் பார்வையில்
இதயம் தொலைந்து போக
தவ வீதியில் அகதி போல
கால்கள் கடுக்க நிற்கிறேன்
அண்ணார்ந்து நான் பார்க்க
பழைய டயர் போல கனவு
ஈசல்களோடு நான் இறக்க
ஒரு கவிதை போல மனது
சாயங்கள் போகாத - அந்த
வானவில் பூச்சிக் காட்டில்
காயங்கள் வாங்கிய - இந்த
கோழையின் அன்பு பாவம்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (17-Nov-18, 12:44 pm)
பார்வை : 735

மேலே