கண்களில் மலர்ந்த காதல்
....கண்களில் மலர்ந்த காதல்.....
கண்கள்தான் கவிதைகள் சொல்ல
கனிந்திடுமே காதலும் மெல்ல
நிலவோடு கதை பேசி
மௌனத்தை உடைத்தேன்
ஆனாலும் பதில்களில்லை...
இருதயத்திருடன் அவன்
என் இமைகளின் இம்சை அவன்
விழிகளின் மொழிகள் அவன்
என் விடையில்லா கேள்வி அவன்
இருவிழி கொண்டு இருதயம் திறந்தேன்
இருந்தும் ஏனோ இடையினில் நின்றேன்
இருவேறு மாற்றங்கள் எனக்குள்ளும் நிகழ
இடம்மாறிப்போனேன் நானே
என்றும் உன் இணையாக நானே...நானே..