காதல்
கண்ணும் கண்ணும் கலந்து ஓர்
கண்ணிய உறவு தந்திடும்
காதல் எனும் உறவாம் அது
கண்ணு கண்ணும் கலப்பதோ ஓர் உணர்வு
காதலும் ஓர் உணர்வே காணமுடியாதது
காதலுக்கு முன் வரும் மோதலில்
பிறக்கும் மோகம் காமம் இவ்விரண்டும்
உடலால் உணர முடியும் உணர்வாலும்
இருப்பினும் காதல்போல் என்றென்றும்
இறவாத உணர்வல்ல .....உடலோடு வந்து
உடலோடு அழிவது இவ்விரண்டும்
காதல் உடலோடு மட்டுமல்லாது உடல்
அழிந்தாலும் அழியாதது அமரத்துவம் வாய்ந்தது