ஆத்மார்த்த தொடர்பு

உனது கடந்த பிறவியின் ஆத்மா நான்
அந்த ஆத்மாவின் நிழல் நீ
நிழலுக்குரிய உடல் நான்
உடலின் உயிர் நீ.

உயிர் பிரிந்தபின்...
இந்த உடலின் ஆத்மாவாக நீ இருப்பாய்.
ஆத்மாவின் நிழலாக நான்
நிழலுக்கான உடலாக நீ
உடலின் உயிராக நான்.

இந்த பரஸ்பர ஜனன பரிமாற்ற சுழற்சி
ஒரு பிறவி, இரு பிறவிகளில் அல்ல
இது விதி இட்ட ஜென்மாந்திர கட்டளை.
யுகயுகாந்திரங்களுக்கும் தொடர்ந்துகொண்டேயிருக்கும்

எழுதியவர் : யேசுராஜ் (19-Jan-20, 12:39 pm)
சேர்த்தது : யேசுராஜ்
பார்வை : 109

மேலே