என் தேவதை நீயடி

உன்னைக் கண்டதும் இப்போது
தான் பூத்த அந்த ரோஜாவின்
முகத்தில் திடீரென ஓர் வாடல்
இதழிலும் ஏதோ ஓர் நோவல்
உன்னழகு போல் தான் இல்லையே எனும்
காழ்ப்புணர்ச்சியினால் அது வந்ததோ
சொல்லத்தான் நினைக்கிறேன்
மனதிலே என்றும் வீற்றிருப்பது
செதுக்கிய சிற்பமான உன்
சுந்தர வதனம் தான் என்பதை
உன் உடல் முல்லை வாசம் நுகர்ந்ததும்
என்னை ஒருகணம் மறக்கிறேன்
குயிலும் பொறாமை கொள்ளும்
உன் குரல் அருகில் கேட்டதும்
வார்த்தை வசமிழக்கிறேனடி நான்


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (19-Jan-20, 12:18 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 219

மேலே