மகிழ்ந்தான் அவன்

அது ஓர் அழகான மாளிகை
மேசை எங்கும் அறுசுவை உணவு
பரிமாறப் பணியாள்
பசியில்லா வயிறு அதனால்
அவன் சுவைத்தது கொஞ்சம்
அதிகமாய் சொச்சம்
சிறிது நேரத்தில் யாவரும் அகர்ந்தனர்
எல்லாம் அங்கு வெறிச்சோடியது
குளிரூட்டி சுழலும் பஞ்சணை மெத்தையில்
அவன் தலை வைத்தான் துணக்கு யாருமில்லாத
தனிமையில் மனம் உளல
விழிகளில் உறக்கம் வர மறுத்தது
மனவிரக்தியில் அவன் இரவு நகராமல் நகர்ந்தது
அங்கு உணவுண்ண அமர்ந்தனர் ஆறுபேர்
அவ்வோட்டைக் குடிசை வீட்டில் மீதம் எதுவுமில்லை
உழைத்துக் களைத்த உழவன் அவன் தந்தை
உலர்த்திக் களைத்த பணிப்பெண் அவள் தாய்
கூடவே நான்கு மக்களும்
ஓர் ஆழாக்கு சாதம் ஆறு பச்சை மிளகாய்
கால் கோப்பை தேங்காய்ப் பால்
ஐந்தே நிமிடத்தில் எதுவும் மிச்சமின்றி
அங்கு எல்லாம் காலியானது
வெக்கைக் காற்றும் ஆவணிப் புழுக்கமும்
தலையணை இல்லாக் கயிற்றுக் கட்டிலில்
கூடவே அவன் நால் மக்களும்
விளையாடிக் கழித்தான் சிலநேரம் அவர்களுடன்
தலை வைத்தான் உறங்கிப் போனான்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (19-Jan-20, 2:32 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 115

மேலே